2024-ல் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்- ரசிகர்கள் நம்பிக்கை

 
ரஜினி

இணையதள ரஜினி ரசிகர்களின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை கேகே நகரில் நடைபெற்றது.

கூட்டம்

2024 இல் ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்பிக்கை தெரிவித்ததோடு,அவர் அரசிலுக்கு வந்தாலும் வரவில்லை என்றாலும் தொடர்ந்து அவருக்கு உறுதுணையாக பயணிப்போம் என கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இணையதள ரஜினி ரசிகர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 200 கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர் அதோடு ரத்த தானமும் வழங்கியுள்ளனர். மேலும் கூட்டத்தில் பங்கேற்ற ரஜினி ஆதரவாளர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் 2024 இல் ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் அவர் அரசிலில் பயணித்தாலும் பயணிக்காவிட்டாலும் ரசிகராக அவருக்கு உறுதுணையாக, பக்க பலமாக  இருப்போம் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இணையதள ரசிகர்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.