"தனித்து நிற்கும் தவெக நிலைமை அந்தோ பரிதாபம்"- ராஜேந்திர பாலாஜி

 
ராஜேந்திர பாலாஜி

 சிவகாசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக சார்பில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதிமுக கூட்டணிக்கு ஜாதகமாக உள்ளது. வயது வரம்புின்றி அனைத்து தரப்பினரும் பேசும் பொருளாக அதிமுக உள்ளது. திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி மீது கோபக்கனைகளை வீசுகின்றனர். அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அண்ணா திமுக தேர்தல் அறிக்கை நாட்டில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதே வலியுறுத்தும். திமுக ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். தமிழ்நாட்டில் போதைக் கலாச்சாரம், பாலியல் வன்முறை, குற்ற சம்பவங்கள் ஆகியன பெருகி   சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தமிழகத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். தேர்தல் முடிவுக்குப்பின்பு தான் ஐசியு  வார்டுக்கு அதிமுக போகுதா? தேமுதிக போகுதா?- என்பது தெரிய வரும். ராஜ தந்திரியான கலைஞரால் கூட அதிமுகவை அழிக்க முடியவில்லை. 53- வயதாகும் அதிமுகவில் புது ரத்தத்துடன் இளைஞர்கள் எடப்பாடி பின்னால் அணிவகுத்து நிற்பதால் திமுக கூட்டணிக்கும் தேமுதிகவுக்கும் தான் ஐசியுக்கு போகும் வாய்ப்பு ஏற்படும்.1980-ல்  எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுக இருக்காது என்றனர். அதிமுக அழியும் என சொல்பவர்களின் அரசியல் வாழ்க்கை தான் முடிந்து போகும். தனித்து நிற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைமை அந்தோ பரிதாபம் என்ற நிலைக்கு உள்ளாக்கப்படுவார்கள். 210 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சி அமைக்கும். மெஜாரிட்டி பலத்தோடு எடப்பாடி பழனிச்சாமி வலுவான முதல்வர் ஆவார். என்றார்.