நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 
ttn

பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளிவந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.500 கோடி வரை மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மcற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது  செய்யப்படுவோம்  என்ற அச்சத்தில்  ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

rajendra balaji

இருப்பினும் முன் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை  உச்ச நீதிமன்றத்தில்  தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ராஜேந்திர பாலாஜி நான்கு வார கால இடைக்கால ஜாமீன் வழங்க உத்தரவிடப்பட்டது.  இந்த காலகட்டத்தில் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,  அவரது பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி இடம் ஒப்படைக்க வேண்டும்,  விருதுநகர் தவிர்த்து வேறு பகுதிகளுக்கு செல்ல கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

rajendra balaji

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து அவர் இன்று வெளிவந்தார்.  பண மோசடி வழக்கில் சிறையில் இருந்த அவர், ஜாமீன் கிடைத்ததை அடுத்து இன்று 7:15 ராஜேந்திர பாலாஜி சிறையிலிருந்து வெளியே வந்தார்.