“விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையெனில் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்”- ராஜேந்திர பாலாஜி

 
ராஜேந்திர பாலாஜி ராஜேந்திர பாலாஜி

விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார்.

virudhunagar district minister rajendra balaji press meet

சிவகாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, “விஜய் தனித்து நின்று போட்டியிட்டால் திமுக தமிழக வெற்றிக்கழகத்தை அழித்து விடும். விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. விஜய் நடிகர் என்பதால்  அவரை பார்க்க நாங்கள் கூட செல்வோம். தல அஜித், சூப்பர் சார் ரஜினிகாந்த் வந்தால் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட இருமடங்கு கூட்டம் அதிக அளவில் வரும். தேர்தல் களத்தில் திமுக தவெகவிற்கு மட்டுமே போட்டி என விஜய் கூறுவது உண்மைதான், இரண்டாவது இடத்திற்கு இரு கட்சிகளுக்கு போட்டி என்பதை விஜய் சொல்கிறார். களத்தில் அதிமுகதான் வெற்றி பெறும். விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும். விஜய் தனித்து நின்றால் தவெக அழிந்துவிடும்” என்றார்.