தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநராக ராஜேந்திர அர்லேக்கர் நியமனம்..!

 
1

தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த ராஜேந்திர அர்லேக்கர், தற்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒடிசா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய 6 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை திங்கள்கிழமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தற்போது கேரள மாநில ஆளுநராகப் பணியாற்றி வரும் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் (Rajendra Vishwanath Arlekar) தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சிக்கிம் மாநில ஆளுநராக இருக்கும் ஓம் பிரகாஷ் மாத்தூர் (Om Prakash Mathur) கேரளா மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் விவரம்:

  • தமிழ்நாடு: ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் (கேரள ஆளுநராக இருந்தவர்)

  • கேரளா: ஓம் பிரகாஷ் மாத்தூர் (சிக்கிம் ஆளுநராக இருந்தவர்)

  • ஒடிசா: விராஜ் மோகன் ராம் (Braj Mohan Ram)

  • கர்நாடகா: டாக்டர் சுதா யாதவ் (Dr Sudha Yadav)

  • உத்தரகாண்ட்: டாக்டர் தால் சிங் பிசென் (Dr Dhal Singh Bisen)

  • சிக்கிம்: துஷ்யந்த் கெளதம் (Dushyant Gautam)