அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கவில்லை- ஆளுநர் மாளிகை

 
 அண்ணாமலை

அறிஞர் அண்ணாவை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

bjp tamilnadu leader annamalai met governor rn ravi in guindy raj bhavan |  Annamalai met Governor: ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம்.. ஆளுநரை சந்தித்த  பாஜக தலைவர் அண்ணாமலை

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் திரு. கே.அண்ணாமலை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.


திரு. கே.அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.