"தவறான தகவல்களை நம்ப வேண்டாம்"- ஆளுநர் மாளிகை

 
rn ravi rn ravi

பீகார் நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 

ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் தீயணைப்பு படை வீரருக்கு கொரோனா இருப்பதாக  வெளியான செய்திகளுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகாரை சேர்ந்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவில்லை. தனி நபருக்கெதிரான எந்த தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையையும் ஆளுநர் அங்கீகரிக்கவில்லை. ஆளுநர் பரிந்துரைத்ததாக தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளது.