ராஜஸ்தானின் புகழ்பெற்ற Palace on Wheelsசொகுசு ரயில் ரத்து..!

 
1

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உறுதியற்ற நிலை ஆகியவற்றால் சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. 

பொதுவாக 70 முதல் 80 சதவீத இடங்கள் நிரம்பி வழியும் இந்த ரயிலில், இந்த சீசனின் இறுதி பயணத்தில் வெறும் 30 பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். 84 பயணிகள் வரை பயணிக்கும் வசதி கொண்ட இந்த ரயிலை இயக்க, குறைந்தபட்சம் 14 கேபின்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 

கடந்த ஆண்டு இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்பட்ட பாதிப்பு, இந்த ஆண்டு ஈரான் போரினால் தொடர்கிறது. இதனால் ராஜஸ்தானின் சுற்றுலாத்துறை பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதுடன், நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 14 லட்சம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் கொண்ட இந்த ரயிலில், இந்த சீசனில் திட்டமிடப்பட்ட 32 பயணங்களில் 10 பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.