தமிழ்நாடு போலீசை கைது செய்த ராஜஸ்தான் போலீஸ்

 
police

திருட்டி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழ்நாடு போலீசாரை ராஜஸ்தான் மாநில காவல்துறை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Police


திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர்கள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் திருச்சி, மதுரை ,திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் 255 சவரன் நகைகளை அவர்கள் கொள்ளை அடித்தனர். திருச்சியில் மட்டும் 170 சவரன் கொள்ளை போனது. இது தொடர்பாக நகைகளை மீட்க கன்டோன்மெண்ட் உதவியாளர் கென்னடி தலைமையில் 15 போலீசார் கைது செய்யப்பட்ட ஆகிய இருவரை அழைத்து கொண்டு ராஜஸ்தான் விரைந்தனர். அவர்கள் அங்கு 300 கிராம் நகைகளை தந்து விட்டு மீதம் உள்ள நகைகளை விற்று விட்டோம் அதற்கு பதிலாக 25 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அவர்கள் கூறிய இடத்திற்கு தனிப்படை போலீசாரில் 12 பேர் அங்கு சென்றனர். 

அப்போது கொள்ளையர்களின் உறவினர்கள் தமிழ்நாடு போலீசார் தங்களிடமிருந்து பணத்தை லஞ்சமாக பெற முயற்சிக்கின்றனர் என  ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். அதனால் அங்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த தனிப்படை போலீசார் 12 பேரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் உரிய ஆவணங்களை காட்டி எதற்காக ராஜஸ்தான் வந்தோம் என்பதை விளக்கி கூறியுள்ளனர். அதன் பின்பு உரிய ஆவணங்களை பெற்ற பின்பு அவர்களின் ஒப்புதலோடு கொள்ளையர்களின் சொத்துக்களை மீட்ட போலீசார் அவர்களோடு தற்பொழுது திருச்சிக்கு திரும்பினர். அவர்களிடமிருந்து 300 கிராம் நகை மீட்கப்பட்டது.