ராஜாஜியின் கொள்ளுப்பேரன் ராஜினாமா

 
ர

மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரசில் இருந்து விலகுவதாக முடிவெடுத்திருக்கிறார்.  இதையடுத்து அவர் காங்கிரஸ் தலைவர்  கார்கேவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்.

 சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார் எனும் ராஜாஜி  கவர்னர் ஜெனரலாய் நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.   சக்கரவர்த்தி என்பது அவரது குடும்பப் பெயர். சேலம் மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தில் 1879 ஆம் ஆண்டில் பிறந்தவர்.   சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்று சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார்.   21 வயதில் திருமணம் செய்து கொண்டார்.  

ர

 பொது வாழ்க்கையில் வ. உ. சி,  சுப்பிரமணிய பாரதி , அன்னிபெசன்ட் அம்மையார்,  திலகர் ஆகியோரிடம் பழகினார்.  சேலம் விஜயராகவாச்சாரியார் மூலம் அரசியல் அறிமுகமானது ராஜாஜிக்கு.    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1937 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது.  சென்னை மாநிலத்தில் ராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைந்தது.    1946 ஆம் ஆண்டில் நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற்றார் ராஜாஜி.  

 1939 ஆம் ஆண்டில் காந்தி சட்டமறுப்பு இயக்கம் தொடங்கிய போது தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டார் ராஜாஜி. காங்கிரசில்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி 1960 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியை நிறுவியினர்.  முன்னதாக 19 48 முதல் 1950 வரை கவர்னர் ஜெனரலாய் பதவி வகித்தார்.  1952 முதல் 1954 காலகட்டத்தில் சென்னை மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தார்.

விடுதலைப் போராட்ட வீரர்,  அரசியல்வாதி,  எழுத்தாளர், வழக்கறிஞர் என்று பன்முகம் கண்ட மூதறிஞர் ராஜாஜி,  தனது  94 வயதில் 1972 ஆம் ஆண்டு காலமானார்.  அவரது கொள்ளுப்பேரன் காங்கிரசில் இருந்து விலகுவதாக எடுத்திருக்கும் முடிவு காங்கிரசில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.