2001ல் மோடி மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டா முதல்வரானா?- அண்ணாமலைக்கு அதிமுக கேள்வி

 
Annamalai modi

பிரதமர் மோடிக்கு நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, எனக்கு அறிவுரை சொல்ல அருகதை இல்லை. அதிமுக கரையான் போல் கரைந்து வருவதாகவும்,  சில தலைவர்களின் சுயலாபத்திற்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் விக்கிரவாண்டி பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், நாட்டில் நம்பிக்கை துரோகம் என்கிற பெயருக்கு என்றும் பொருத்தமானவர் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானாரா ? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.

RajSathyan,வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு சேகரித்த ராஜ் சத்யன் மீது  வழக்குப்பதிவு - case filed against aiadmk candidate raj sathyan for  campaigning in poll booth - Samayam Tamil

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஐடி பிரிவின் செயலாளர் ராஜ் சத்யன், “20,000 புத்தகம் படித்த அண்ணாமலை, அவர்கள் தலைவரின் வரலாற்றைப் படிக்கவில்லை போல ? 2001ல் எந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மோடி முதல்முறை குஜராத் முதல்வரானார் என்று கேட்கும் அளவிற்கு எங்களுக்கு உங்களை போல் Short time memory impairment இல்லையே! 


உங்கள் தோளோடு தோள்நின்ற நண்பர்களே இன்று உங்கள் அற்ப அரசியலை தோலுரித்து, உங்களை நம்பிக்கை துரோகி என்று அழைக்கிறார்களே?  அதைப் பற்றி முதலில் பேசுங்கள். அடுத்தவர் பக்கம் கண்ணாடியை திருப்புவதற்கு முன்னர் உங்கள் முகத்தைப் பாருங்கள்.Desperate attention Seeking is a disease. நல்ல மருத்துவரை அணுகவும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.