ஆளுநர் மாளிகை டூ தலைமைச் செயலகம்..! முதலமைச்சர் விஜய்யின் சிறு வயது நண்பருக்கு முக்கிய பொறுப்பு..?

 
1

முதலமைச்சரின் அரசியல் ஆலோசகராகப் பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி அவர்களும், பொது நிகழ்வுகள் மற்றும் இதர விவகாரங்களுக்கான ஆலோசகராக முதல்வரின் நெருங்கிய நண்பர் விஷ்ணு ரெட்டி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதில் இருந்தே அக்கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் வியூகம் முதல் அமைச்சரவை தேர்வு முதல் முக்கிய பங்காற்றியுள்ளார்.


இதேபோல், விஜய்யின் நண்பரும், தொழிலதிபருமான விஷ்ணு ரெட்டியை முதல்வரின் பொது விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது .இவர், முதல்வர் விஜய்யின் சிறுவயது நண்பர் என்று கூறப்படுகிறது.ஆளுநர் மாளிகைக்கு ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கடிதம் வழங்க சென்றபோதுகூட உடனிருந்தார்.

யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், உலகளாவிய அளவிலும் பல முக்கியத் தேர்தல்களில் முன்னணி அரசியல் தலைவர்களுக்குப் பின்னால் இருந்து வெற்றிகரமான உத்திகளை வகுத்துக் கொடுத்த அனுபவம் வாய்ந்தவர் ஜான் ஆரோக்கியசாமி. தமிழகத்தில் கடந்த காலங்களில் பாமக உள்ளிட்ட கட்சிகளின் மெகா பிரச்சார உத்திகளுக்குப் பின்னால் இவருடைய பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது.தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, அதன் பின்னணியில் இருந்து கட்சித் தலைவர் விஜய்க்கு மிகச் சிறந்த அரசியல் ஆலோசனைகளையும், தேர்தல் வியூகங்களையும் வகுத்துக் கொடுத்தவர் இவரே. ஒரு இளம் கட்சியை மிகக் குறுகிய காலத்தில் தேர்தலை நோக்கி வழிநடத்தியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.