மழைநீர் வடிகால் பணிகள் - முதல்வர் இன்று ஆய்வு

 
tn

சென்னையில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.  வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து முதல்வர் இன்று ஆய்வு  மேற்கொள்கிறார்.

cm stalin

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாடி, திரு.வி.க.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு  மேற்கொள்கிறார்.

tn

பெரம்பூரில் தணிக்காச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன் திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்கிறார்.