'எல் நினோ' மாற்றம்- மழை குறையும்; வெப்பம் அதிகமாகும் என கணிப்பு

 
தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்!

இந்த மாதம் மழை குறையும்; வெப்பம் அதிகரிக்கும்- வானிலை மையம்

இந்தியாவில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவில், மிக வெப்பமான மாதம் ஆகஸ்ட் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, செப்டம்பரில் இந்தியாவின் மொத்த மழைப்பொழிவு இயல்பை விட குறையும். நீண்டகால சராசரியான 167.9 மி.மீ. மழையில் 9% குறைவாக பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.மத்திய இந்தியாவில் உபரி மழை இருந்தாலும், வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென் தீபகற்பத்தின் சில பகுதிகளில் பற்றாக்குறை நீடிக்கிறது. வடமேற்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு தீபகற்பத்தின் சில பகுதிகளில் இயல்பானது முதல் அதிகமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது. பல பகுதிகளில் மழை குறைவாக இருக்கலாம்.ஆகஸ்ட் மாதம் 1901-க்குப் பிறகு அதிக வெப்பமான ஆகஸ்டாக பதிவான நிலையில், செப்டம்பரில் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவும்.

எல் நினோ நிலைமைகள் வலுப்பெறும் நிலையில், பருவமழையின் இறுதிக்கட்டம் வெப்பமாகவும் ஒப்பீட்டளவில் வறண்டதாகவும் இருக்கும். நாட்டின் சராசரி வெப்பநிலை 28.01 °C ஆகப் பதிவு. இது வழக்கமான சராசரியை விட 0.67 °C அதிகம்.பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான 'எல் நினோ' மாற்றமும் இதற்கு முக்கியக் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவில், மிக வெப்பமான மாதம் ஆகஸ்ட் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.