நவம்பரில் மழை குறையும்- வானிலை மையம்

 
மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் சராசரி அளவில் 77% வரை மழை பொழியக்கூடும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திராவிலும் இயல்பை விட மழை பொழிவு குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே நாளை, நாளை மறுநாள் வட தமிழகத்தில் மழைகக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு அருகே வரும் முரசு புயலின் மழை மேகங்கள் உள்ளன. முரசு புயலின் மையப்பகுதி தெற்கு ஆந்திராவை நோக்கியே நகர்கிறது. தெற்கு-மத்திய ஆந்திராவில் மிக அதிக அல்லது அதீத கனமழைக்கு வாய்ப்பு. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எல்நினோ தாக்க ஆய்வுக் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.  தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.