தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. சென்னையில்..

 
rain

தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..  அதேபோல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.  

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும்,  மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் தற்போது   மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த  நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் எனவும்,  எனவே 21ஆம் தேதி வரை தமிழ்நாடு,  புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

அதன்பிறகு வரும் 22 ஆம் தேதி தமிழ்நாடில் கடலோர மாவட்டங்களிலும்,  அதனை ஒட்டிய மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்திருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் 3வது நாளாக இன்று நள்ளிரவுக்கு மேல் அதிகாலை வரை தொடர்ந்து  மிதமான மழை பெய்தது. தொடர்ந்து  பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடனும், சில இரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.