சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை தொடரும்

 
rain

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவ.8) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், மைலாப்பூர், கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்துவருகிறது.  இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவ.8) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.