தமிழகத்​தில் இன்று முதல் ஜூலை 18 வரை மழைக்கு வாய்ப்பு..!

 
1 1

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக இன்று (ஜூலை 13) முதல் வரும் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும், 16, 17, 18-ம் தேதி​களில் சில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை​ பெய்​யக்​கூடும். நீல​கிரி மற்​றும் கோவை மாவட்​டத்​தின் மலைப் பகு​தி​களில் 15 முதல் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் இன்று சில இடங்​களில் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயரக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 100 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 81 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவில் இருக்​கும். தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 65 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.