அடுத்த 3 மணி நேரத்திற்கு 2 மாவட்டங்களில் மழை!!

 
rain

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இரண்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 03.05.2024 முதல் 06.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

tn

இந்நிலையில் தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை திருப்பத்தூர்,  கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.