அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை..

 
rain

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோக்கா” புயல் நேற்று  காலை மிகத்தீவிர புயலாக மாறியது. இந்நிலையில் மோக்கா புயல் இன்று காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலானது  மியான்மர் மற்றும் வங்க தேசத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.  மோக்கா புயலால் தமிழகத்திற்கு  எந்த விளைவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வானிலை மையம் தகவல்..

இருந்தபோதிலும், இதன் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 13( இன்று ) முதல் மே 16 வரை  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேநேரம் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று தெரிவித்திருந்தது.  இந்நிலையில்  கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.