சென்னையில் மழை - விமான சேவைகள் பாதிப்பு

 
flights

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. சென்னையில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், திநகர் ,, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் ,வடபழனி, மயிலாப்பூர் ,ஆழ்வார்பேட்டை , ஆர் .ஏ.புரம்,  கேகே நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. 

rain

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் ,குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர் ,அம்பத்தூர் ,பூவிருந்தவல்லி ,காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், மாங்காடு, குன்றத்தூர் இடங்களிலும் பரவலாக மழை வெளுத்து வாங்கியது.

rain

இந்நிலையில் நேற்று பெய்த திடீர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 6 சர்வதேச விமானங்கள் உட்பட 16 விமான சேவைகள் பாதிப்படைந்தது. இதனால்  பயணிகள் கடும் அவதியடைந்தனர்.  விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில்  தரையிறங்க முடியாமல், திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.