மதியம் 3 மணிவரை 4 மாவட்டங்களில் மழை!!

 
karur rain


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 1 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

rain

குறிப்பாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 

Rain

இந்நிலையில் மதியம் மூன்று மணி வரை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதேபோல்  திருப்பூர், நீலகிரி ,தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையானது பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது