அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழை!!

தமிழ்நாட்டில் அடுத்த 3மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையானது நீலகிரி, கோயம்புத்தூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர் ,திருப்பூர் ,தேனி ,திண்டுக்கல் ,ஈரோடு ,சேலம், நாமக்கல், தென்காசி ,சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை ,ராணிப்பேட்டை ,கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.