அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வருகிற 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், மேலும் இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.