ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த ரயில்வே வாரியம் ஒப்புதல்

 
z

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

Duties of TTE in Second Class Sleeper Coach: Things to Know | RailRestro  Blog - Food in Train

காலிப்பணியிடங்களை ஓய்வுபெற்ற ஊழியர்களை கொண்டு நிரப்ப அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணி நியமனம் செய்து காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

பணி ஓய்வுக்கு முந்தைய 5 ஆண்டுகள் பணியில் நன்னடத்தை சான்று பெற்றவர்களை பணியமர்த்தலாம், குற்றச்சாட்டுகளுக்குள்ளாகி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாத பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பாயிண்ட்ஸ் மேன், லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பாளர், பொறியாளர், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.