சென்னை பறக்கும் ரயில் சேவையை தமிழக அரசிடம் ஒப்படைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
நீண்ட இழுபறிக்குப் பிறகு சென்னை பறக்கும் ரயில் சேவையை, தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு சென்னை பறக்கும் ரயில் சேவையை, தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்பு திட்டத்திற்கு
ரயில்வே வாரியம் கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைக்க பெற்றுள்ளது. தமிழக அரசு சார்பில் மெட்ரோ நிறுவனம் சமர்ப்பித்திருந்த திட்ட அறிக்ககைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததையடுத்து, இந்தாண்டு இறுதிக்குள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் பறக்கும் ரயில் சேவை இணைக்கப்படும்.


