ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டம் - மீனவர்கள் அறிவிப்பு!

 
fisher

 எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 

fisher

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.  ராமேஸ்வரம்: கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 24 பேரையும், 4 விசைப்படகுகளை  இலங்கை கடற்படை சிறை பிடித்தது.

fishermen

இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தல் ஈடுபடவுள்ளனர்.