அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் வீட்டில் 3வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!

 
rain

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினறுமான அருண் நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  இதேபோல் கோவையில் உள்ள அவரது சகோதரர் மணிவன்னன் இல்லத்திலும் சோதனை நடந்தது. 

இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 
சென்னை R.A.புரத்தில் உள்ள ரவிச்சந்திரன் இல்லத்தில் அமலாக்கத்துறை 3வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டூர்புரத்தில் உள்ள TVH நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.  அடையாறு காந்திநகரில் TVH நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் என்பவரது வீட்டிலும் ED சோதனை நடந்து வருகிறது.