“இளைஞர்களின் எழுச்சியை தவெகவின் வெற்றி பிரதிபலிக்கிறது”- ராகுல்காந்தி

 
actor vijay rahul gandhi

இளைஞர்களின் எழுச்சியை தவெகவின் வெற்றி பிரதிபலிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தவெகவின் அருதி பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றனர். இதனிடையே தவெக தலைவர் விஜய்க்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் ராகுல்காந்தி. அப்போது, “இளைஞர்களின் எழுச்சியை தவெகவின் வெற்றி பிரதிபலிக்கிறது. அரசியலில் இளைஞர்களின் குரலை யாராலும் புறக்கணிக்க முடியாது” என்றார். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் பணியாற்றிய காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.