#BREAKING சனிக்கிழமை தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி
Apr 15, 2026, 22:25 IST1776272120791
தேர்தல் பரப்புரைக்காக சனிக்கிழமை தமிழகம் வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் அனல்பறக்க ஆங்காங்கே பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சாரத்திற்கு வராதது சலசலப்பை ஏற்படுத்தியது. ராகுலுக்கு திமுக கூட்டணியில் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக சனிக்கிழமை தமிழகம் வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி. பொன்னேரி, சோளிங்கர், துறையூர் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார். ராகுல் பரப்புரை மேற்கொள்ளும் 3 தொகுதிகளும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியாகும்.



