மே 21ல் சென்னை வருகிறார் ராகுல்காந்தி!

 
rahul

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மே 21 ஆம் தேதி ராகுல்காந்தி சென்னை வருகிறார். 

raj

1991-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தந்தார். அப்போது பிரசார மேடை அருகே தணு என்ற மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவை போற்றும் விதமாக ஸ்ரீபெரும்பத்தூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது, ராஜீவ் காந்தியின் 32-வது ஆண்டு நினைவுதினம் வரும் 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். முன்னதாக பெங்களூருவில் 20 ஆம் தேதி நடைபெறும் கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் ராகுல்காந்தி கலந்துகொள்கிறார். அதன்பிறகு கர்நாடகாவில் இருந்து சென்னை வருகிறார்.