விஜய்-க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

 
tt


நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.  இந்த சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.  எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டதற்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து கூறியிருந்தார்.

tt

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,  தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு நன்றி. ஒவ்வொரு இந்தியனின் குரலும் கேட்கப்படும் போது நமது ஜனநாயகம் வலுவடைகிறது. இது நமது கூட்டு இலக்கு மற்றும் கடமை ஆகிய இரண்டும் ஆகும் என்று பதிவிட்டுள்ளார்.