தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி..!

 
1

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார். புதிய பதவியுடன் முதல்முறை நாடாளுமன்றம் சென்றிருந்தார். சமீப காலமாக ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட் உடன் வலம் வந்த ராகுல் காந்தி, மக்களவையில் ஜிப்பா உடன் மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறியிருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களது வாழ்த்தும் இடம்பெற்றுள்ளது. தனது வாழ்த்து செய்தியில், ”ராகுல் காந்தி அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி, ”நன்றி திரு விஜய். ஒவ்வொரு இந்தியரின் குரலும் சுதந்திரமாக ஒலிக்கப்படும் போது தான் ஜனநாயகம் வலுப்பெறும். இது நம்முடைய ஒருங்கிணைந்த இலக்கு மற்றும் கடமை ஆகும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.