கலைஞருக்கு சோனியா காந்தி, ராகுல் மரியாதை!

 
rr

டெல்லி திமுக அலுவலகத்தில் கருணாநிதி திருவுருவ படத்திற்கு சோனியாகாந்தி, ராகுல் மரியாதை செலுத்தினர்.

tt
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவர் புகைப்படத்துக்கு சோனியாகாந்தி , காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் சிறந்த தலைவர், தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாசாரத்தை பாதுகாக்க போராடிய கலைஞருக்கு மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

eee

தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, கலைஞர் பிறந்தநாளை ஒட்டி, திமுக தோழர்களுடன் அவருக்கு மரியாதை செலுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை பலமுறை சந்தித்தது, அவரின் | உரையை கேட்டது, அவரின் ஞானத்தின் வழியே கிடைத்த அறிவுரைகள் ஆகியவற்றை பாக்கியமாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.