யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - ராகுல் காந்தி பங்கேற்பு

 
akilesh

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

யு.ஜி.சி வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி தி.மு.க மாணவரணி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. யு.ஜி.சி வரைவு அறிக்கையை திரும்பப்பெறக்கோரி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த நிலையில், டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை காத்திடுவோம் யுஜிசியின் அதிகார அத்துமீறலை முறியடிப்போம் என திமுக தெரிவித்துள்ளது. இதேபோல் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.