இஸ்லாமியர்களின் சொத்து உரிமைகளை பறிக்கும் ஆயுதம் வக்பு சட்ட திருத்தம் - ராகுல் காந்தி

 
Rahul Gandhi neet

மத உரிமைக்கு விரோதமாக இருப்பதால் காங்கிரஸ் கட்சி வக்பு சட்ட திருத்தத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், முஸ்லிம்களை புறந்தள்ளி அவர்களது தனியார் சட்டங்களையும் சொத்து உரிமைகளையும் பறிப்பதற்கான ஆயுதம் தான் வக்ப் ( திருத்த) சட்ட முன்வடிவு. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் அவர்கள் தோழமைகளின் இந்த தாக்குதல் இன்று முஸ்லிம்களை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.  
ஆனால் இது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதால் நாளை பிற சமுகத்தினரும் தாக்குதலுக்கு இலக்காகுவார்கள். இந்தியா எனும் தத்துவத்திற்கு மீதான தாக்குதலாகவும் அரசமைப்புச் சட்டத்தின் 25 ம் பிரிவு அளிக்கும் மத உரிமைக்கு விரோதமாக இருப்பதாலும் காங்கிரஸ் கட்சி இந்த திருத்தத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.