ஆம்ஸ்ட்ராங் படுகொலை - ராகுல் காந்தி கண்டனம்

 
Rahul

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

tt

 பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது அவரை பின் தொடர்ந்த, 6  பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

Rahul Gandhi


இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு இரங்கல்; குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.