செந்தில்பாலாஜியை கைது செய்ய முயற்சி - ரகுபதி
தவெக ஆட்சியை நிச்சயம் கவிழ்க்க மாட்டோம், தேர்தலை சந்தித்துதான் ஆட்சியை பிடிப்போம் என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, “முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்ய தவெக அரசு முயற்சிக்கிறது. இதுவே அவர்களின் நோக்கம், தவெக கூட்ட நெரிசலுக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என தவெக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. திமுக குதிரை பேரம் செய்திருந்தால் 2017ஆம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்திருக்க முடியும். திமுக எப்போதுமே குதிரை பேரத்துக்கு எதிரானதுதான். ஜனநாயகத்தை நாங்கள் நம்புகிறோம். தவெக ஆட்சியை நிச்சயம் கவிழ்க்க மாட்டோம், தேர்தலை சந்தித்துதான் ஆட்சியை பிடிப்போம்.
அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் எண்ணம் ஒரு சிறு துளி கூட மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது. குதிரை பேரத்தில் ஈடுபட்டிருந்தால் கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்க சொல்லியிருக்க மாட்டோம். வாஷிங்மிஷினாக விஜய் இருக்கிறார். சி.விஜயபாஸ்கருக்கு 4 வழக்கு நிலுவையில் இருக்கிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 3 வழக்கு நிலுவையில் இருக்கிறது. இவர்களின் கறையை போக்க்கும் மிஷினுக்கு பெயர் விஜய்” என்றார்.

