“ஒரே ஆண்டில் 2 தூண்களையும் இழந்துவிட்டேன்”- நடிகை ராதிகா உருக்கம்
இயக்குநர் பாரதிராஜாவால் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதிகா, அவரது இழப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள். இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன்.
— Radikaa Sarathkumar (@realradikaa) June 10, 2026
இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது.
என் வலியை உணர்ந்து,… pic.twitter.com/ifdYyDY7fR
இதுதொடர்பாக நடிகை ராதிகா தனது எக்ஸ் தளத்தில், “என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள். இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன். இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது. என் வலியை உணர்ந்து, என்னுடன் நின்று, அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

