ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? ராதிகா ஆவேசம்

 
tn

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு சர்ச்சை பேசினால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு பிறகு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் . ஆளுநர் ரவி,  பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ff

இந்த சூழலில் சமீபத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சரத்குமாரை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.  இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார்.  அதை கொச்சையாக விமர்சனம் செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான சில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.  


இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஏன் டா படுபாவி!  ஜெயிலுக்கு போயும் நீ  திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய  சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம்  கடுமையாக தண்டிக்கப்படனும்., என்று குறிப்பிட்டுள்ளார்.