‘இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி..’ அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார் அளித்துள்ளார்.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு சர்ச்சை பேசினால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு பிறகு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் . ஆளுநர் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சூழலில் சமீபத்தில் காஞ்சிபுரம் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சரத்குமாரை விமர்சனம் செய்து பேசியிருந்தார். இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதை கொச்சையாக விமர்சனம் செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான சில வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதிகா சரத்குமார் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.