“இது முதலமைச்சரின் விருப்பம்”- உண்மையை உடைத்த ரத்தன் பண்டிட்
Jun 29, 2026, 21:37 IST1782749226601
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக K.வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க-வினருக்கு ரத்தன் பண்டிட் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ரத்தன் பண்டிட், “தங்களை திராவிடர்கள் என்று சொல்கிக்கொள்ளும் இவர்கள்.. மொழி பாரபட்சம் இல்லை, சமூக பாரபட்சம் இல்லை, மத பாரபட்சம் இல்லை என்றும் பேசுகிறார்கள். அப்படியானால், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு நபர் ஏன் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது? தென் இந்தியாவின் முழு வரலாற்றையும் நன்கு அறிந்தவர் அவர். இது முதலமைச்சரின் விருப்பம். அவருடைய செயல்பாட்டைப் பார்த்த பிறகு நீங்கள் கேள்வி எழுப்பலாம். இப்போது அவருடைய தேர்வு குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பப்படக் கூடாது” என்றார்.

