சென்னையில் ஒரு மணி நேரத்தில் மழைநீர் முழுவதும் அகற்றம்- ராதாகிருஷ்ணன்

 
ராதாகிருஷ்ணன்

சென்னையில் திடீரென அதிக மழைப்பொழிவு ஏற்படும் பகுதிகளில் கால்வாய்கள், ஆறுகள் வழியே மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது, அதுபோன்ற சூழலில் மோட்டார் பம்புகளை கூடுதலாக பயன்படுத்தி மழைநீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்  என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன்

சென்னை பாரிமுனை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் இணைப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் வட கிழக்கு பருவ மழைக்காலமான தற்போது 426 சதுர கிலோ மீட்டர், 35 ஆயிரம் சாலைகள், 11 ஆயிரம் மழைநீர் வடிகால்கள் கண்காணிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் கூடுதலாக  876.9 கி மீ அளவிற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 3 நாட்களில் புழல் ஆலந்தூர் அடையாறில் அதிக மழை பெய்தது. மழைநீர் தேங்கிய இடங்களில் 1 மணி நேரத்தில்  மழைநீர்  அகற்றப்பட்டது. 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை மூலம் மழைநீர் தேக்கம் குறித்து கண்காணித்து வருகிறோம். மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது மேம்பட்டுள்ளன. 

15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் மூலம் தொடர்ந்து பல்லடுக்கு பன்முக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் மழை இல்லாதபோதும் மண்டல வாரியாக கண்காணிப்பில் ஈடுபடுவர். நீர்வள , நெடுஞ்சாலை , கழிவுநீர் அகற்றல் , மெட்ரோ , மின் , ரயில்வே ,  பொதுப்பணி , தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் சென்னை மாநகராட்சி சார்பில் இணைந்து பணியாற்றி வருகிறோம். தனியார் எஸ்டேட்கள் , மாநகராட்சி வசம் இல்லாத சாலைகளில் , தனியார் குடியிருப்பு பகுதிகள் போன்ற இடங்களில் மழைநீர் தேங்குகிறது. அதை சரிசெய்யவும் தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 22 சுரங்க பாதையில் 2 சுரங்க பாதையில் மட்டுமே நேற்று கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருந்தது. 

அறிவிக்கப்பட வேண்டிய நோய் கருப்பு பூஞ்சை" - மக்கள் நல்வாழ்வுத்துறைச்  செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி! | nakkheeran

திடீரென அதிக மழைப்பொழிவு ஏற்பட்டால் , மழைநீர் கால்வாய்கள் , கூவம் , அடையாறு உள்ளிட்ட ஆறுகள் வழியே மழைநீர்வடிவதில் தாமதம் ஏற்படும், அதுபோன்ற சூழலில் கூடுதலாக பம்புகளை பொருத்தி மழைநீர் வெளியேற்றப்படும். மழைநீரை வெளியேற்ற கூடுதலாக பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. தி.நகர் , திருவான்மியூர் போன்ற சில பேருந்து நிலையங்கள் தாழ்வாக இருக்கின்றன , அங்கு தேங்கும் மழைநீரையும் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. கோயில் குளங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மழைபெய்யும்போது எங்கேனும் சாலைகளில் பழுது ஏற்பட்டால் பொதுமக்கள் மாநகராட்சிக்கு 1913-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அக்டோபர் மாதத்திற்கு பிறகு புதிதாக மழைநீர் கால்வாய்கள் தோண்டப்படாது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார் , அதன்படி தற்போது புதிய கால்வாய்கள் அமைக்கப்படவில்லை ,  விடுபட்ட மழைநீர் கால்வாய்களை இணைக்கும் பணிதான் தற்போது  நடைபெறுகிறது. கோவளம் , கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட உள்ளிட்ட வடிகால்  பணிகள் 2025-ல் நிறைவு பெறும். கடந்த இரண்டரை ஆண்டில் பல நீர்நிலைகளில் பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன, கால்வாய்களில் நீர் ஓட்டத்தை  பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத நிலையை சமாளிக்கவும் சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 800-ஆக இருந்த தாழ்வான பகுதிகள் தற்போது  37-ஆக குறைந்துள்ளன. 

மகளிர் உரிமை தொகை.. விண்ணப்பம் பெற டோக்கன் வழங்கப்படும்: ராதாகிருஷ்ணன்  பேட்டி..!


முதலமைச்சருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளபோதும் வடகிழக்கு பருவமழைக்கான  முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தொலைபேசி மூலம் எங்களிடம் கேட்டறிந்து வருகிறார். சென்னையில் மழை பாதிப்பு குறித்து  தொலைக்காட்சியில் , பத்திரிகையில் வரும் செய்திகளையும் பார்த்து ஆலந்தூர் , ஐந்துபர்லாங் சாலை உள்ளிட்டவற்றின் நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார் . சென்னையில் டெங்கு , ப்ளூ காய்ச்சல் , வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. தேவைப்படும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்” என்றார்.