கொரொனா 3 ஆம் அலையில் இறப்பு விகிதத்தைக் முடிந்த அளவு குறைக்க வேண்டும்- ராதாகிருஷ்ணன்

 
Radhakrishnan

மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தல்படி பொது சுகாதார வழிமுறைகளில் உள்ள மாற்றங்கள் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கரோனா"- சுகாதாரத்துறைச்  செயலாளர் பேட்டி... | nakkheeran

அதன்படி, “கொரொனா 3 ஆம் அலையில் இறப்பு விகிதத்தைக் முடிந்த அளவு குறைக்க வேண்டும் அதற்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது கை கழுவுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூட்டம் கூடும் இடங்களை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஐசிஎம்ஆர் நெறிமுறைகளை பின்பற்றி யார் யாருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிகுறிகள் இருப்பவர்களுக்கு முக்கியமாக பரிசோதனை செய்ய வேண்டும். 

அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள ஐசிஎம்ஆர் அறிவுறுத்தவில்லை. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தாலும் ஏழு நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு அறிகுறி இல்லை என்றால் எந்தவித பரிசோதனையும் இன்றி அவர்களை வீட்டிற்கு அனுப்ப இந்திய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது. 

வீடு திரும்பியவர்கள் குறித்து மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் குறித்து தொடர்ந்து தகவல்களை சேமித்து வைத்திருக்க வேண்டும். 

மாவட்டங்களில் உள்ள கோவிட் கேர் மையங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். மருத்துவ ஊழியர்கள் ஒற்றுமையாக ஒரு குழுவாக பணிபுரிய வேண்டும். 

சுகாதாரத்துறை சார்பில் தினமும் எத்தனை இழப்புகள் எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதில் கர்ப்பிணிகள், குழந்தைகள் எத்தனை பேர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 

அதுமட்டுமன்றி மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் உள்ளது. எத்தனை ஆக்சிசன் பதுக்கைகள் உள்ளது அதில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். 

தடுப்பூசி செலுத்துவதற்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு செலுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்படுகிறது.

முன் களப்பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இதர நோய் தொற்றுகள் இருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து அதிகரித்து வரும் கொரொனா தொற்றை குறைக்க அரசு வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.