“மின்தடை உண்மை தான்! காரணம் இதுதான்’’- ராதாகிருஷ்ணன்

 
``மின்தடை உண்மை தான்! காரணம் இதுதான்’’- ராதாகிருஷ்ணன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தனது குடும்பத்துடன் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், “மின்தடை தொடர்பாக முதலமைச்சர் இரண்டு முறை ஆய்வு செய்துள்ளார். அமைச்சர் நிர்மல்குமாரும் வாரத்திற்கு 3 முறை ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார். சில பகுதிகளில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது உண்மைதான். அதில் மறைப்பதற்கோ, மறுப்பதற்கோ எதுவும் இல்லை. அது மின் விநியோக பிரச்சனை அல்ல.  பகிர்மானம் தொடர்பான பிரச்சனை. வருங்காலத்தில் இதனை எப்படி தீர்ப்பது குறித்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். சில இடங்களில் காற்று அடித்து மின்தடை ஏற்படுகிறது. மின் உற்பத்தியை அதிகரிக்க என்ன வலி என்பதை ஆலோசித்துவருகிறோம். வெயில் நாட்களில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்.