தனுஷின் 'ராயன்' முதல் சிங்கிள் - மாஸ் அப்டேட் இதோ!!

 
tn

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ராயன். இப்படத்தை ப. பாண்டி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.   இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

tn

கடந்த மாதமே இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ராயன்  திரைப்படத்தின் வெளியீடு ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. ராயன் படத்தின் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.  இது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சன் பிக்சர்ஸ் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  அடங்காத அசுரன் என்ற இப்பாடல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.