இலங்கை எம்.பி. இரா.சம்பந்தன் மறைவு - ஈபிஎஸ் இரங்கல்
![ep](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/3301087b6ec4f601634ff3838a479244.jpg)
இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும் , மறுக்க முடியாதவருமாகிய, ஈழ தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) ஐயா, அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (30.6.2024) இரவு 11 மணியளவில் தனது 91 வது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும் ,
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 1, 2024
மறுக்க முடியாதவருமாகிய,
ஈழ தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன,
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்
(Rajavarothiam Sampanthan) ஐயா, அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று… pic.twitter.com/rlbmshQ47S

இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.