"அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவர் மகாராணி எலிசபெத்" - கமல் இரங்கல்!!

 
rn

96 வயதான இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் உயிரிழந்ததாக ராயல் குடும்பத்தினர் நேற்று அறிவித்தனர்.  இரண்டாம் எலிசபெத்கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார். பிரான்ஸ் மன்னருக்கு அடுத்து ஒரு அரசை சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் என்ற பெருமையுடன் அவர் விடைபெற்றுள்ளார். 

tn

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின்  தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.  25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.  5 ஆண்டுகளுக்கு முன்னர்  லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார். 



முன்னதாக 1997ல் நடிகர் கமலஹாசனின் மருதநாயகம் பட தொடக்க விழாவில் ராணி எலிசபெத் கலந்து கொண்டார். MGR ஃபிலிம் சிட்டி படப்பிடிப்பில்  ராணி எலிசபெத் கலந்து கொண்டார். ஏறத்தாழ 20 நிமிடங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார்.  இதனால் சர்வதேச கவனம் திரைப்படத்தின் மீது குவிந்தது.