சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு - குவாரியின் மற்றொரு உரிமையாளர் சரண்!

 
murder

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராமையா காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை செய்யப்பட்டார். சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஜெகபர் அலி லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

மற்றொரு குவாரி உரிமையாளர் ராசு உட்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராமையா காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். நமனசமுத்திரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.