#BREAKING காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

 
exam

தமிழ்நாட்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17இல் தொடங்கி செப்டம்பர் 24ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். 3 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி, செப்டம்பர் 24 வரை காலாண்டு தேர்வு நடைபெறும். 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.